கொரோனா

அணு ஆயுதமின்றி
உலகத்தை
உருகுலைக்க வந்த
மூன்றாம் உலகப்போர்

சீனத்து வசம் இருந்து
சீமை எல்லாம்
சீரழிக்க வந்த
கொடிய வைரஸ்

அண்ட நாடெல்லாம்
அஞ்சி நடுங்கிட
அட்டூழியம் புரிந்திடும்
காணாக் கொலைகாரன்

பசி பட்டினி
பாதி மறையும் சமயம்
திரும்ப பதிவேற்றம் செய்த
மா பாதகன்

ஒருவனிடம் உறவவாடி
ஓராயிரம் பேரை
காவு வாங்க துடிக்கும்
கொடிய கொடூரன்

பிழைப்புத் தேடி
போனவரை எல்லாம்
பின்வாங்க வைத்த
பிணப் பிசாசு

ஒருவேளை சோற்றுக்கு
அல்லல்படும் தினக் கூலியையும்
அடக்கி போட்ட
வஞ்சகக் காரன்

விண்ணைத் தொடும்
விஞ்ஞானம் இருந்தும்
உன்னைக் கொல்லும்
மருந்தேனோ புலப்படவில்லை

ஆடிய ஆட்டம்
அடங்கும் நாள் வரும்
உன்னை அன்று
வெல்வோம் நாங்கள்

Comments

Popular posts from this blog

எது உயரந்தது?